உலக சாம்பியன்ஷிப்பிற்கு தகுதிபெற்ற முதல் இந்திய மல்யுத்த வீரர்
October 14 , 2018 2627 days 864 0
ஹங்கேரியின் புத்தபெஸ்டில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான பட்டியலில் இடம் பிடித்த முதல் இந்திய மல்யுத்த வீரராக CWG (Common Wealth Games) மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற பஜ்ரவ் புனியா ஆகியுள்ளார்.
65 கிலோ ஆண்கள் ப்ரீஸ்டைல் நிகழ்வுப் பிரிவில் ஐக்கிய உலக மல்யுத்தம் வெளியிட்டுள்ள தரவரிசைப்பட்டியலில் 45 புள்ளிகள் பெற்று இவர் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
65 கிலோ பிரிவில் 50 புள்ளிகளுடன் துருக்கியின் செலாத்தீன் கிளிக்ஸல்லயன் முதலிடத்திலும் ரஷ்யாவின் இலியாஸ் பெக்புலடோவ் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
மல்யுத்திற்கான தாய் அமைப்பான ஐக்கிய உலக மல்யுத்தமானது உலக சாம்பியன்ஷிப்பில் வீரர்கள் வைப்பு முறையை முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.