உலக சிரிப்பு தினமானது ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் ஞாயிறு அன்று கொண்டாடப்படுகிறது.
சிரிப்பு பற்றியும் சிரிப்பதனால் ஏற்படும் பல ஆரோக்கியப் பலன்கள் பற்றியும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினமானது கொண்டாடப்படுகிறது.
2021 ஆம் ஆண்டில் இத்தினமானது, மே 02 அன்று கொண்டாடப்படுகிறது.
இத்தினமானது ‘Laughter Yoga’ என்ற உலகளாவிய இயக்கத்தின் நிறுவனரான டாக்டர் மதன் கட்டாரியாவின் முயற்சியினால் 1998 ஆம் ஆண்டு மே 10 அன்று மும்பையில் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.