உலக சுகாதார அமைப்பின் 2025-2028 ஆம் ஆண்டிற்கான முக்கியத் திட்டம்
October 14 , 2024 295 days 260 0
இந்தியாவானது தற்போது, 2025 முதல் 2028 ஆம் ஆண்டு வரை உலக சுகாதார அமைப்பின் முக்கிய நடவடிக்கைத் திட்டத்திற்கு சுமார் 300 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை வழங்க உறுதியளித்துள்ளது.
பாரம்பரிய மருத்துவத்திற்கான சிறப்பு மையத்திற்கு 250 மில்லியன் டாலர் செலவிடப் படும்.
தென்கிழக்கு ஆசியாவில் இதுவரை அதிக அளவு நிதியை இந்தியா வழங்கியுள்ளது.
சுமார் 7.1 பில்லியன் டாலர் நிதி இடைவெளியை நிரப்பும் நோக்கில் செயல்படும் உலக சுகாதார அமைப்பானது இதுவரை 2.2 பில்லியன் டாலருக்கும் அதிகமான பங்களிப்பு உறுதிமொழிகளைப் பெற்றுள்ளது.