இந்திய மருத்துவ மருந்து உற்பத்திக் கழக நிறுவனமானது தனது 18 ஆயுர்வேத மருந்துகளுக்காக வேண்டி உலக சுகாதார அமைப்பின் GMP/COPP சான்றிதழைப் பெற விண்ணப்பித்துள்ளது.
GMP என்றால் நல்லமுறையிலான ஒரு உற்பத்திச் செயல்முறை (Good Manufacturing Practice – GMP) என்று பொருளாகும்.
பெரும்பாலான உலக மருந்து நிறுவனங்களுக்கு தனது மருந்துகளை விற்பனை செய்வதற்கு உலக சுகாதார அமைப்பின் GMP சான்றிதழ் அவசியமாகும்.
மருந்து உற்பத்திப் பொருள் சான்றிதழானது (Certificate of Pharmaceutical Product – CPP or COPP) உலக சுகாதார அமைப்பினால் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் வழங்கப்படும் ஒரு சான்றிதழாகும்.