உலக சுகாதார அமைப்பின் புதிய காற்றுத் தர நிர்ணய விதிமுறைகள்
September 25 , 2021 1514 days 639 0
உலக சுகாதார அமைப்பானது 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு தனது காற்றுத்தர நிர்ணய விதிமுறைகளின் முதல் மேம்பட்ட பதிப்பினை வெளியிட்டுள்ளது.
24 மணிநேர சராசரிக்கான p.m 2.5 விதிமுறையானது 2005 ஆம் ஆண்டிலிருந்த 25 மைக்ரோ – கி/மீ3என்பதற்குப் பதிலாக 15 மைக்ரோ – கி/மீ3என மாற்றப்பட்டுள்ளது.
வருடாந்திர சராசரிக்கான p.m 2.5 விதிமுறையானது 2005 ஆம் ஆண்டிலிருந்த 10 மைக்ரோ – கி/மீ3 என்பதற்குப் பதிலாக 5 மைக்ரோ – கி/மீ3என மாற்றப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்ட காற்றுத் தரத்திற்கான இந்தத் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, ஆண்டின் பெரும்பாலான அளவில் இந்தியா முழுவதும் ஒரு மாசுபட்ட மண்டலமாக கருதப்படும்.