உலக சுகாதார அமைப்பின் வெளியுறவு கணக்குத் தணிக்கையாளர்
June 2 , 2023 797 days 537 0
2024 முதல் 2027 ஆம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டு காலத்திற்கு உலக சுகாதார அமைப்பின் வெளியுறவு கணக்குத் தணிக்கையாளராக இந்தியாவின் (CAG) தலைமை கணக்குக் கட்டுப்பாட்டாளரான கிரிஷ் சந்திர முர்மு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
இந்தியாவின் தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டாளர் தற்போது உலக சுகாதார அமைப்பினைத் தவிர, உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (2020-2025), சர்வதேச அணுசக்தி முகமை (2022-2027), இரசாயன ஆயுதங்களைத் தடை செய்வதற்கான அமைப்பு (2021-2023) மற்றும் உலக நாடுகளின் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியம் (2020-2022) ஆகியவற்றிற்கான வெளியுறவு கணக்குத் தணிக்கையாளராக உள்ளார்.
தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டாளர் ஐக்கிய நாடுகள் சபையின் வெளியுறவுத் தணிக்கையாளர் குழுவில் உறுப்பினராக உள்ளார்.
அவர் உயர் நிலைத் தணிக்கை நிறுவனங்களின் சர்வதேச அமைப்பு மற்றும் ASOSAI ஆகியவற்றிற்கான ஆளுகைக் குழுவின் ஒரு உறுப்பினராகவும் உள்ளார்.