உலக சுகாதார அமைப்பு - உப்பு நுகர்வு மற்றும் உயர் இரத்த அழுத்தம் மீதான நடவடிக்கை
May 22 , 2024 462 days 358 0
உலக சுகாதார அமைப்பு /ஐரோப்பா "உப்பு நுகர்வு மற்றும் உயர் இரத்த அழுத்தம் மீதான நடவடிக்கை" என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
உப்பு சேர்த்துக் கொள்வதைக் குறைக்கவும், மக்களின் ஆரோக்கியத்தை நன்கு பாதுகாப்பதற்காக உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டறிந்துக் கட்டுப்படுத்தவும் இந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
உடல்நல அபாயங்களைக் குறைக்க மக்கள் தினமும் 5 கிராமுக்குக் குறைவான உப்பை (2 கிராமுக்குக் குறைவான சோடியத்திற்குச் சமம்) உட்கொள்ள வேண்டும்.
ஐரோப்பிய பிராந்தியத்தில் உடல்நலக் குறைபாடு மற்றும் முன்கூட்டிய மரணத்திற்கு இருதய நோய்கள் (CVDs) முக்கிய காரணமாக உள்ளன.
ஆண்டுதோறும் 42.5% உயிரிழப்புகளை ஏற்படுத்துகிற இது ஒவ்வொரு நாளும் 10,000 உயிரிழப்புகளுக்குச் சமம் ஆகும்.