TNPSC Thervupettagam

உலக சுகாதார தினம் 2026 - ஏப்ரல் 07

April 7 , 2026 15 hrs 0 min 53 0
  • இந்த நாள் அறிவியலில் நம்பிக்கையை மேம்படுத்துவதையும், சான்றுகள் அடிப்படையிலான சுகாதார முடிவுகளை எடுப்பதை ஊக்குவிப்பதையும், ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக அறிவியல் சார்ந்த தீர்வுகளை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பால் (WHO) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நாள், ஆரோக்கியத்திற்கான அறிவியல் ஒத்துழைப்பை மேம்படுத்தும் ஒரு வருடம் நீடிக்கும் உலகளாவியப் பிரச்சாரத்தைத் தொடங்கியது.
  • இந்த பிரச்சாரம் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தை இணைக்கும் “One Health approach” என்பதில் கவனம் செலுத்துகிறது.
  • சர்வதேச ஒரே ஆரோக்கிய உச்சி மாநாடு (G7 தலைமையின் கீழ் பிரான்ஸால் நடத்தப் படுகிறது) மற்றும் உலக சுகாதார அமைப்பு ஒத்துழைப்பு மையங்களின் உலகளாவிய மன்றம் (2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 முதல் 9 வரை) ஆகிய இரண்டு முக்கிய நிகழ்வுகள் இப்பிரச்சாரத்தை ஆதரிக்கின்றன.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Together for health. Stand with science" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்