TNPSC Thervupettagam

உலக சுங்க அமைப்பு - பிராந்தியக் கூட்டம்

November 17 , 2018 2453 days 779 0
  • ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில் உலக சுங்க அமைப்பின் (World Customs Organization-WCO) 4 நாள் பிராந்தியக் கூட்டம் நடைபெற்றது.
  • இந்த கூடுகையானது WCO-வின் துணைப் பொதுச் செயலாளர் ரிகார்டோ டிராவினே மற்றும் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கத் துறை வாரியத்தின் தலைவரான S.ரமேஷ் ஆகியோரால் தலைமை தாங்கப்பட்டது.
  • இது ஆசியாவின் 33 உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகளால் கலந்து கொள்ளப்பட்டது.
உலக சுங்க அமைப்பு
  • WCO ஆனது சுங்க நிர்வாகங்களின் செயல்திறன் மற்றும் ஆற்றலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அரசுகளுக்குகிடையேயான ஒரு சுயாதீனமான அமைப்பு ஆகும்.
  • இது 1952 ஆம் ஆண்டு சுங்கத் துறை கூட்டுறவு சங்கம் (CCC - Customs Co-operation Council) என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் பெல்ஜியத்தின் பிரசல்ஸில் உள்ளது.
  • இது சுங்கத் துறை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கான தகுதியுடைய ஒரே சர்வதேச அமைப்பு ஆகும். இது சர்வதேச சுங்கத் துறை சமுதாயத்தின் குரல் எனவும் கருதப்படுகிறது.
  • இது உலக வர்த்தகத்தில் ஒட்டு மொத்தமாக சுமார் 98 சதவிகிதத்தை செயல்படுத்துகின்ற, உலகமெங்கிலும் உள்ள 182 சுங்கத் துறை நிர்வாகங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்