TNPSC Thervupettagam

உலக சுதந்திர தினம் 2026 - நவம்பர் 09

November 12 , 2026 3 days 64 0
  • 1989 ஆம் ஆண்டில் பெர்லின் சுவர் இடிந்து வீழ்ந்ததைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 9 அன்று உலக சுதந்திர தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த தினம் 2001 ஆம் ஆண்டில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷால் பிரகடனப்படுத்தப்பட்டது.
  • கிழக்கு ஜெர்மனிய மக்கள் மேற்கு ஜெர்மனிக்குச் செல்வதைத் தடுப்பதற்காக 1961 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 அன்று கிழக்கு ஜெர்மனியால் பெர்லின் சுவர் கட்டப்பட்டது.
  • மக்களின் போராட்டங்கள் மற்றும் அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, 1989 ஆம் ஆண்டு நவம்பர் 9 அன்று கிழக்கு ஜெர்மனி எல்லைக் கடப்புகளைத் திறந்தது.
  • இந்தச் சுவரின் வீழ்ச்சி பனிப்போரின் முடிவு மற்றும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான கோரிக்கையின் அடையாளமாக மாறியது.
  • ஜெர்மனி 1990 ஆம் ஆண்டு அக்டோபர் 3 அன்று அதிகாரப்பூர்வமாக மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்