சுனாமி அபாயங்கள் மற்றும் முன் எச்சரிக்கை அமைப்புகள், தயார்நிலை மற்றும் சமூக மீள்தன்மை ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றிய உலகளாவிய விழிப்பு உணர்வை ஊக்குவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த அனுசரிப்பு ஆனது 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப் பட்டது.
சுனாமிகள் மிகவும் அரிதானவை என்றாலும், இவை மாபெரும் அழிவை ஏற்படுத்தும் என்பதோடு கடந்த நூற்றாண்டில் உலகளவில் 2.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சுனாமியால் உயிரிழந்துள்ளனர்.
நவம்பர் 05 ஆம் தேதியானது, ஒரு விவசாயி சுனாமி நெருங்கி வருவதைப் பற்றி எச்சரித்து கிராம மக்களைக் காப்பாற்றியதாகக் கூறப்படும் "இனாமுரா-நோ-ஹி" (The Burning of the Rice Sheaves-நெற்கதிர்களை எரித்தல்) என்ற ஒரு ஜப்பானியக் கதை மூலம் ஈர்க்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Be Tsunami Ready: Invest in Tsunami Preparedness" என்பதாகும்.