சர்வதேச சூரிய ஒளிக் கூட்டமைப்பானது கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றக் கருத்தரங்கில் உலக சூரிய ஒளி வங்கியை (World Solar Bank- WSB) தொடங்க முடிவு செய்துள்ளது.
இந்தக் கருத்தரங்கானது 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.
இது காலநிலை சார்ந்த பகுதியில் இந்தியாவில் தலைமைத்துவத்தை எடுத்துக் காட்டும் முயற்சிக்கு உதவ இருக்கின்றது.
WSBன் தலைமையகமானது இந்தியாவில் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
இந்தியாவில் அமைக்கப்பட இருக்கும் முதலாவது பன்னாட்டு வங்கி இதுவாகும்.
WSB ஆனது அடுத்த 10 ஆண்டுகளில் ISA அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு 50 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை வழங்க முடிவு செய்துள்ளது.