பசிபிக் தீவு நாடுகளின் ஒரு முன்மொழிவைத் தொடர்ந்து, இந்தத் தினமானது 2016 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.
இந்தத் தினமானது சூரை மீன்களின் பாதுகாப்பை ஊக்குவிப்பதையும், எதிர்காலச் சந்ததியினர் இந்தக் கடல் வளத்திலிருந்து தொடர்ந்து பயனடைய முடியும் என்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சூரை மீன்கள் வெப்பமண்டல மற்றும் மித வெப்பமண்டலக் கடல்களில் காணப்படும் புலம்பெயரும் இனங்கள் ஆகும்.
அனைத்துக் கடல்வாழ் மீன்வளங்களின் மதிப்பில் 20% மற்றும் உலகளவில் வர்த்தகம் செய்யப்படும் கடல் சார் உணவுகளில் 8% சூரை மீன்கள் ஆகும்.