சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கத்தின் கொள்கைகளைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாளானது அனுசரிக்கப்படுகிறது.
மக்களின் இன்னல்களைக் குறைப்பதற்கும் சுதந்திரம், மனிதநேயம், வேற்றுமை காட்டாதிருத்தல், பொதுவுடைமை, ஒற்றுமை மற்றும் நடுநிலைமை ஆகியவற்றுடன் கூடிய கண்ணியமான வாழ்க்கையைப் பெற அவர்களுக்கு உதவுவதற்கும் வேண்டி இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “Unstoppable” (தடுத்து நிறுத்த முடியாதது) என்பது ஆகும்.
மேலும் இந்த தினமானது ஹென்றி டியூனந்தின் (Henry Dunant) பிறந்த நாளினையும் (மே 08, 1828) குறிக்கிறது.
ஹென்றி டியூனந்த் என்பவர் சர்வதேச செஞ்சிலுவைக் குழு அமைப்பின் (International Committee of Red Cross – ICRC) நிறுவனராவார்.
இவர் முதலாவது அமைதிக்கான நோபல்பரிசினைப் பெற்றவராவார்.
ICRC அமைப்பின் தலைமையகமானது சுவிட்சர்லாந்தின் ஜெனீவா என்னுமிடத்தில் அமைந்துள்ளது.