TNPSC Thervupettagam

உலக செல்வவள அறிக்கை 2025

June 12 , 2025 2 days 25 0
  • அமெரிக்காவின் அதி உயர் நிகரச் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களின் (HNWI) எண்ணிக்கை 7.6% அதிகரித்து 7.9 மில்லியனாக உயர்ந்ததால், அமெரிக்காவில் மேலும் 562,000 மில்லியனர்கள் அதிகரித்துள்ளனர்.
  • உலகின் சென்டி-மில்லியனர்களில் 36% பேர் (100 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பிலானச் சொத்துக்களைக் கொண்டிருப்பவர்கள்) மற்றும் உலகின் பில்லியனர் நபர்களில் 33% பேர் அமெரிக்காவில் வசிக்கின்றனர்.
  • ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் 5.6% வளர்ச்சியுடன் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் சிறப்பான நிலையில் உள்ளன.
  • இந்தியாவின் பில்லியனர்கள் எண்ணிக்கை மில்லியனர்களை விட மிகவும் வேகமாக அதிகரித்து வருகின்றது.
  • இந்தியாவில் தோராயமாக சுமார் 250 பில்லியனர்கள் உள்ளனர் என்பதோடு இது சீனாவின் 520 பில்லியனர்களுடன் ஒப்பிடும் போது பாதி அளவு மட்டுமே.
  • இந்தியாவில்சுமார்  4,290 அதி உயர் நிகரச் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் (30 மில்லியன் டாலர்களுக்கு மேலான சொத்துக்கள்) இருந்தனர் என்ற நிலையில் இது சீனாவில் 22,780 ஆகவும், ஜப்பானில் 13,620 ஆகவும் இருந்தது.
  • இந்தியாவின் அதி உயர் நிகரச் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களின் (HNWI) எண்ணிக்கையானது 2024 ஆம் ஆண்டில் சுமார் 5.6% அதிகரித்துள்ளது என்பதோடு அவர்களின் ஒட்டு மொத்தச் செல்வ வளமும் 8.8% உயர்ந்துள்ளது என்ற நிலையில் இது சீனா மற்றும் உலகின் சக நாடுகளை விட அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்