TNPSC Thervupettagam

உலக தண்டுவட மரப்பு நோய் தினம் 2025 - மே 30

June 1 , 2025 7 days 41 0
  • மிக நாள்பட்ட, பெரும்பாலும் உடல் உறுப்பு செயல்பாடுகளை முடக்கும் வகையிலான ஒரு நரம்பியல் நோயான தண்டுவட மரப்பு நோய் (MS) பற்றி முக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • தண்டுவட மரப்பு நோய் என்பது ஒரு நாள்பட்ட நரம்பியல் நோயாகும் என்பதோடு இதில் நோயெதிர்ப்பு அமைப்பு ஆனது நரம்பு இழைகளின் பாதுகாப்பு உறையைத் தவறாகத் தாக்குகிறது.
  • இது மூளைக்கும் உடலின் மற்றப் பகுதிகளுக்கும் இடையிலான தொடர்பில் பல்வேறு சிக்கல்களுக்கு வழி வகுக்கிறது.
  • 2009 ஆம் ஆண்டு இந்த நாளில் தான், மலையேற்ற வீரர் லோரி ஷ்னைடர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் தண்டுவட மரப்பு நோயாளி ஆனார்.
  • இந்த ஆண்டு இத்தினமானது "My MS Diagnosis" என்ற தலைப்பில் "Navigating MS Together" என்ற முழக்கத்துடன் அனுசரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்