உலக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தினம் - பிப்ரவரி 27
February 28 , 2023 899 days 392 0
இந்தத் தினமானது பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆற்றியப் பணி மற்றும் பங்களிப்பினைக் கொண்டாடச் செய்யும் வகையில் உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுகிறது.
சமூகப் பிரச்சனைகளைத் தடுக்க முன்வருகின்ற மற்றும் பல்வேறு முயற்சிகளை மேற் கொள்கின்ற ஒவ்வொரு அரசு சாரா நிறுவனங்களையும் இந்தத் தினம் அங்கீகரித்து கௌரவிக்கிறது.
உலக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தினமானது முதன்முதலில் பால்டிக் கடல் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மன்றத்தால் 2010 ஆம் ஆண்டில் முன் மொழியப் பட்டது.
2014 ஆம் ஆண்டில் தான் அனைத்து நாடுகளிலும் இந்தத் தினமானது கடைபிடிக்கத் தொடங்கப் பட்டது.