உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சங்க தினம் – மே 17
May 21 , 2022 1232 days 394 0
சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) நிறுவப்பட்டதையும், 1865 ஆம் ஆண்டில் முதலாவது சர்வதேச தந்தி ஒப்பந்தம் கையெழுத்தானதையும் உலக தொலைத் தொடர்பு தினம் நினைவு கூருகிறது.
உலகத் தகவல் தினமானது, தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும், உலக தகவல் சங்க (WSIS) உச்சி மாநாட்டில் எழுப்பப்பட்ட ஒரு பரந்த அளவிலான பிரச்சினைகளையும் எடுத்துரைக்கிறது.
2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இவ்விரண்டு தினங்களுக்கான தகுந்த நிகழ்ச்சிகள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டு, அதன் பிறகு ஆண்டுதோறும் ஒரே நாளில் கொண்டாடப்படுகின்றன.