இந்த நாள், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் சமூக களங்கம் மற்றும் மனச் சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
தோல் நிறமி இழப்பு நோய் என்பது மெலனின் உற்பத்தி செய்யும் மெலனோ சைட்டுகள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தால் அழிக்கப்படுகின்ற நிலையாகும்.
இது தோல் அதன் நிறத்தை இழக்க வழி வகுத்து தோலில் வெண்மையான மற்றும் மென்மையான திட்டுகளை ஏற்படுத்துகிறது.
இந்த ஆண்டிற்கான கருத்துரு "Innovation for Every Skin, Powered by AI" என்பதாகும்.