TNPSC Thervupettagam

உலக நகரங்கள் அறிக்கை 2026

May 24 , 2026 16 hrs 0 min 34 0
  • அஜர்பைஜானின் பாக்கு நகரில் நடைபெற்ற உலக நகர மன்றத்தில் 'உலக நகரங்கள் அறிக்கை 2026'-UN-Habitat வெளியிட்டது.
  • கட்டுப்படியாகாத வீடுகள், மோசமான வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அடிப்படை சேவைகளின் பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 40% பேர், அதாவது சுமார் 3.4 பில்லியன் மக்கள் வீட்டு வசதி நெருக்கடியை எதிர்கொள்வதாக அறிக்கை கூறுகிறது.
  • உலகளாவிய வீட்டு விலைக்கும் வருமானத்திற்கும் இடையிலான விகிதம் 2010-ஆம் ஆண்டில் 9.3 ஆக இருந்து 2023-ஆம் ஆண்டில் 11.2 ஆக அதிகரித்துள்ளது, அதே வேளையில் மத்திய மற்றும் தெற்காசியாவில் இந்த விகிதம் 16.8 என்ற அளவில் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
  • உலகளவில் சுமார் 44% குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் 30%-க்கும் மேலான தொகையை வீட்டு வசதிக்காகச் செலவிடுகின்றன, இது அதிகரித்து வரும் வாடகை மற்றும் வீட்டுச் சுமையைக் காட்டுகிறது.
  • மும்பை மற்றும் டெல்லி போன்ற இந்திய நகரங்களில் வீட்டு விலைக்கும் வருமானத்திற்கும் இடையிலான விகிதம் முறையே 14.3 மற்றும் 10.1 என அதிக அளவில் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்