இத்தினமானது, உலகளாவிய நகரமயமாக்கல் சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நிலையான நகர்ப்புற மேம்பாட்டினை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நகர்ப்புறப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதிலும் புதிய நகர்ப்புறச் செயல்பாட்டு நிரலை அடைவதிலும் சர்வதேசச் சமூகத்தை ஈடுபடுத்துவதற்கான Urban October எனப்படும் UN-Habitat தலைமையிலான ஒரு மாத கால முன்னெடுப்பின் முடிவையும் இந்த நாள் குறிக்கிறது.
அனைவரும் நல்லிணக்கத்துடனும் செழிப்புடனும் வாழக் கூடிய உள்ளடக்கிய, மீள்தன்மை மற்றும் நிலையான நகரங்களின் அவசியத்தை இந்த அனுசரிப்பு எடுத்துக் காட்டுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "People-Centred Smart Cities" என்பது ஆகும்.
இந்த ஆண்டு அனுசரிப்பு ஆனது கொலம்பியாவின் பொகோட்டாவில் நடத்தப்பட்டது.