TNPSC Thervupettagam

உலக நகரமயமாக்கலுக்கான வாய்ப்புகள் குறித்த அறிக்கை 2025

November 24 , 2025 3 days 59 0
  • 2025 ஆம் ஆண்டு உலக நகரமயமாக்கல் வாய்ப்புகள் அறிக்கையை ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறை (UN DESA) வெளியிட்டது.
  • உலகின் 8.2 பில்லியன் மக்களில் 45% பேர் தற்போது நகரங்களில் வசிப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • 2025 மற்றும் 2050 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் உலக மக்கள்தொகை வளர்ச்சியில் மூன்றில் இரண்டு பங்கு நகரங்களில் ஏற்படும் என்று அறிக்கை கூறுகிறது.
  • 2025 மற்றும் 2050 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் உலகளாவிய நகர மக்கள்தொகை வளர்ச்சியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஏழு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
  • இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ ஜனநாயக குடியரசு, எகிப்து, வங்காள தேசம் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் 500 மில்லியனுக்கும் அதிகமான புதிய நகர்ப்புற குடியிருப்பாளர்கள் இருப்பர்.
  • இந்தியாவிலும் சீனாவிலும் சேர்ந்து கூட்டாக சுமார் 1.2 பில்லியன் நகரவாசிகள் உள்ளனர்.
  • 1975 ஆம் ஆண்டில் 8 ஆக இருந்த 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பெருநகரங்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 33 ஆக அதிகரித்து உள்ளன.
  • ஜகார்த்தா (42 மில்லியன்), டாக்கா (40 மில்லியன்) மற்றும் டோக்கியோ (33 மில்லியன்) ஆகியவற்றில் மிக அதிக எண்ணிக்கை பதிவாகியுள்ளது என்பதோடு மேலும் இது 2050 ஆம் ஆண்டில் 37 ஆக உயரக்கூடும்.
  • உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட முதல் 10 நகரங்களில் பெங்களூருவும் ஒன்றாகப் பட்டியலிடப் பட்டுள்ளது.
  • இது ஒரு சதுர கி.மீட்டருக்கு 20,000 மக்களைத் தாண்டிய மக்கள்தொகை அடர்த்தியைக் கொண்டுள்ளது.
  • டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையுடன் சேர்த்து, பெங்களூரு இந்தியாவின் ஐந்து பெரு நகரங்களில் ஒன்றாக உள்ளது.
  • உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட 50 நகரங்களில், 12 இந்தியாவில் உள்ளன.
  • 1975 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் உலகளவில் மொத்த நகரங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது மற்றும் 2050 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 15,000 என்பதைத் தாண்டக் கூடும்.
  • தேசிய மக்கள் தொகை அதிகரிக்கும் வேளையில் கூட பல நகரங்கள் குறுகி வருகின்றன என்பதோடு குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவில், குறுகி வரும் நகரங்களில் மூன்றில் ஒரு பங்கு 250,000க்கும் குறைவான மக்களைக் கொண்டுள்ளது.
  • எதிர்கால மேம்பாடு மற்றும் பருவநிலை இலக்குகளுக்கு நிலையான நகர்ப்புறத் திட்டமிடல் அவசியம் என்பதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்