TNPSC Thervupettagam

உலக நன்மதிப்புத் தரவரிசை 2021

November 2 , 2021 1383 days 612 0
  • இந்தியாவின் 4 கல்வி நிறுவனங்கள் டைம்ஸ் உயர்கல்வி இதழ் வெளியிடும் உலக நன்மதிப்புத் தரவரிசையில் (2021) இடம்பெற்றுள்ளன.
  • டைம்ஸ் உயர்கல்வி இதழின் இந்த வருடாந்திரத் தரவரிசையானது உலகம் முழுவதும் உள்ள முன்னணிக் கல்வி நிறுவனங்களுடைய வாக்குகளின் அடிப்படையில் 200 முன்னணிப் பல்கலைக் கழங்களைப் பட்டியலிடுகிறது.
  • பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனமானது இந்தியக் கல்வி நிறுவனங்களின் முதன்மையான முதல் 100 இடங்களில் (91/100) இடம் பெற்றுள்ளது.
  • மற்ற 3 இந்தியக் கல்வி நிறுவனங்களாவன: மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் மற்றும் சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆகியன.
  • அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகமானது 2021 ஆம் ஆண்டிற்கான தர வரிசையில் முதலிடத்தில் உள்ளது.
  • அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவை முறையே 2வது மற்றும் 3வது இடங்களைப் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்