TNPSC Thervupettagam

உலக நாடுகளின் இராணுவச் செலவினம் 2023

April 30 , 2024 17 days 108 0
  • ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் ஆனது மிகச் சமீபத்தில் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் 83.6 பில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவச் செலவினத்துடன், உலகளவில் நான்காவது அதிக இராணுவச் செலவினம் கொண்ட நாடாக இந்தியா திகழ்ந்தது.
  • இந்தியாவின் செலவினம் ஆனது 2022 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 4.2 சதவீதமும், 2014 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 44 சதவீதமும் அதிகரித்துள்ளது.
  • அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உலக அளவில் இராணுவச் செலவினத்தில் முதல் மூன்று இடங்களில் உள்ளன என்ற நிலையில் அவற்றைத் தொடர்ந்து இந்தியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் உள்ளன.
  • உக்ரைன் 2023 ஆம் ஆண்டில் எட்டாவது பெரிய இராணுவச் செலவின நாடாக ஆனது, மேலும் அதன் செலவினத்தை 51% அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்