உலக நாடுகளின் எரிசக்தி குறித்த 74வது புள்ளிவிவர மதிப்பாய்வு
July 1 , 2025 9 hrs 0 min 28 0
இது கியர்னி மற்றும் KPMG நிறுவனத்துடன் இணைந்து எரிசக்தி முகமையினால் (EI) வெளியிட்ட அறிக்கையாகும்.
இந்தியாவின் நிலக்கரி நுகர்வு ஆனது, 2024 ஆம் ஆண்டில் 4% அதிகரித்துள்ளது.
இது ஐரோப்பா, வட அமெரிக்கா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா மற்றும் சுதந்திர நாடுகளின் காமன்வெல்த் அமைப்பு (CIS) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நிலக்கரிப் பயன்பாட்டிற்குச் சமமாகும்.
காற்று ஆற்றல் மற்றும் சூரிய சக்தி போன்ற தூய்மையான எரிசக்தி ஆதாரங்கள் 16% வளர்ச்சியடைந்தன.
ஆனால் புதைபடிவ எரிபொருள் நுகர்வு இன்னும் 1 சதவீதத்திற்கும் மிக அதிகமாக உயர்ந்தது.
இது ஆற்றலில் வெளியாகும் உலகளாவிய கார்பன் டை ஆக்சைடுக்கு (CO₂) சமமான வெளியேற்றத்தில் 1% அதிகரிப்புக்கு வழிவகுத்தது.
இது சுமார் 39.3 பில்லியன் டன்களுடன் தொடர்ச்சியாக நான்காவது அதிக பதிவினைக் குறிக்கிறது.
உலகளாவிய இயற்கை எரிவாயுத் தேவை ஆனது 2024 ஆம் ஆண்டில் 2.5% அதிகரித்து உள்ளது.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (OECD) உறுப்பினர் நாடுகளில் எண்ணெய் தேவை மிகவும் நிலையாக இருந்தது ஆனால் OECD சாராதப் பிராந்தியங்களில் 1% அதிகரித்துள்ளது.
முதன்மை எரிசக்திப் பயன்பாட்டில் நிலக்கரி 57% மற்றும் எண்ணெய் 29% பங்குடன் இந்தியாவின் எரிசக்தி நுகர்வு ஆனது 5.8% அதிகரித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் உலகளாவிய எரிசக்தித் தேவையின் ஒரு வளர்ச்சியில் சீனாவும் இந்தியாவும் இணைந்து 80% பங்கினைக் கொண்டிருந்தன.