வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டு அமைப்பு (UNCTAD) ஆனது, அதிகரித்து வரும் உலகளாவியப் பொதுக் கடனை எடுத்துக்காட்டும் வகையில் 2025 ஆம் ஆண்டு உலக நாடுகளின் கடன் அறிக்கையினை வெளியிட்டது.
உலகளாவியப் பொதுக் கடன் (GPD) ஆனது, 2024 ஆம் ஆண்டில் இதுவரையில் இல்லாத அளவான 102 டிரில்லியன் டாலரை எட்டியது.
இந்தப் போக்குகள் இனியும் தொடர்ந்தால், 2030 ஆம் ஆண்டிற்குள் கடன் பங்கானது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 100 சதவீதத்தினை எட்டக்கூடும்.
வளர்ந்து வரும் நாடுகள் 31 டிரில்லியன் டாலர் மதிப்பிலான கடனை கொண்டுள்ளன, ஆனால் அவற்றின் கடன் 2010 ஆம் ஆண்டு முதல் வளர்ச்சியடைந்த நாடுகளை விட இரண்டு மடங்கு வேகமாக வளர்ந்து வருகிறது.
ஆசியா மற்றும் ஓசியானியா ஆகியப் பகுதிகள் உலகளாவியப் பொதுக் கடனில் 24% பங்கினைக் கொண்டுள்ளன என்பதோடு இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் 5% பங்கினையும்; ஆப்பிரிக்கா 2% பங்கினையும் கொண்டுள்ளன.