குழந்தைகள் மற்றும் பெரியவர்களில் அதிகம் பரவும் தொற்று மிக்க உயிர்க்கொல்லி நோயான நிமோனியா குறித்து விழிப்புணர்வைப் பரப்புவதும் அதனை எதிர்த்துப் போராடுவதும் இதன் நோக்கமாகும்.
இது முதன்முதலில் 2009 ஆம் ஆண்டு குழந்தைகளைத் தாக்கும் நிமோனியாவுக்கு எதிரான உலகளாவிய கூட்டணியால் அனுசரிக்கப்பட்டது.
அதிக தொற்றுத் தன்மை கொண்ட நிமோனியா இருமல், தும்மல் அல்லது பாதிக்கப் பட்ட திரவங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது.
இந்த நோய் நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளை (அல்வியோலி) பாதிக்கும் பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது பூஞ்சைகளால் ஏற்படுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Child Survival" என்பதாகும்.