TNPSC Thervupettagam

உலக நிலக்கரி மின் நிலையச் செயல்திறன்

May 3 , 2022 1285 days 557 0
  • 2021 ஆம் ஆண்டில், கட்டமைப்புப் பணியில் உள்ள உலக நிலக்கரி (அனல் மின்) மின் உற்பத்தி நிலையங்களின் எண்ணிக்கையானது 2020 ஆம் ஆண்டில் இருந்ததை விட 13 சதவீதம் குறைந்துள்ளது.
  • உலக எரிசக்திக் கண்காணிப்பு அமைப்பு மேற்கொண்ட ஒரு கணக்கெடுப்பில் இந்தத் தகவலானது தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில், சுமார் 25,000 மெகாவாட் திறனுள்ள புதிய ஆலைகளை நிறுவி உலக நிலக்கரி மின்சக்தி உற்பத்தியின் விரிவாக்கத்தில் சீனா முன்னிலையில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து, சுமார் 6,100 மெகாவாட் திறனுடன் இந்தியா 2வது இடத்தினைப் பெற்றுள்ளது.
  • சீனா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவை மற்ற நாடுகளில் நிறுவப்படும் புதிய நிலக்கரி ஆலைகளுக்குத் தாங்கள் நிதியளிப்பதை நிறுத்துவதாக உறுதி ளித்தன.
  • இருப்பினும், உள்நாட்டில் புதிய நிலக்கரி ஆலைகளை நிறுவுவதில் அனைத்து நாடுகளையும் விட சீனா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்