உலக நிலமதிப்புச் சந்தையின் வெளிப்படைத் தன்மைக்கான குறியீடு
July 2 , 2018 2506 days 744 0
அண்மையில் வெளியிடப்பட்ட உலக நிலமதிப்புச் சந்தையின் வெளிப்படைத்தன்மைக்கான குறியீட்டில் 100 நாடுகளைக் கொண்ட தரவரிசைப் பட்டியலில் இந்தியா 35-வது இடத்தில் உள்ளது. (GRETI – Global Real Estate Transparency Index)
சந்தை அடிப்படைகள், கொள்கைச் சீர்திருத்தங்கள் மற்றும் அந்நிய நேரடி முதலீட்டில் தாராளமயமாக்கல் ஆகியவற்றில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக இந்தியா இந்தக் குறியீட்டில் ஒரு படி முன்னேறியுள்ளது.
இந்தக் குறியீட்டை ஜெஎல்எல் நிலமதிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆண்டுக்கு இரு முறை கணக்கிடப்படும் இந்த ஆய்வில் 2016-ல் இந்தியா 36வது இடத்தில் இருந்தது. 2014-ல் இந்தியாவின் தரவரிசை 40 ஆக இருந்தது.
ரியல் எஸ்டேட் சந்தையில் இந்தியா தற்போது அரை வெளிப்படைத்தன்மை மண்டலத்தில் உள்ளது.
ஐக்கிய ராஜ்ஜியம் (1-வது), ஆஸ்திரேலியா (2-வது), அமெரிக்கா (3-வது) பிரான்ஸ் (4-வது) மற்றும் கனடா (5-வது) ஆகிய நாடுகள் முதல் 5 இடத்தில் உள்ளன.
வெனிசுலா (100-வது), லிபியா (99-வது), செனேகல் (98-வது), மொசாம்பிக் (97-வது) மற்றும் ஐவரி கோஸ்ட் (96-வது) ஆகியவை மோசமான செயலாக்கம் கொண்ட நாடுகளாகும்.