உலக நீரில் மூழ்கி உயிரிழப்பதனைத் தடுக்கும் தினம் - ஜூலை 25
July 27 , 2025 2 days 9 0
இந்தத் தினம் நீரில் மூழ்குவதன் மூலம் ஏற்படும் துயரத்தைத் தடுப்பது குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
ஆண்டுதோறும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் நீரில் மூழ்கி இறக்கின்றனர், அவற்றில் பெரும்பாலானவை குழந்தைகள் ஆவர் இதனை நிவர்த்தி செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் 2021 ஆம் ஆண்டில் முதன்முதலில் இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது.
உலகளவில் நீர்ப் பாதுகாப்பு, நீச்சல் திறன்கள் மற்றும் வலுவான தடுப்பு உத்திகளை மேம்படுத்துவதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Your story can save a life" என்பதாகும்.