இந்தத் தினமானது பெருங்கடல்கள், கடல்கள் மற்றும் ஆறுகள் போன்ற பல்வேறு நீர் நிலைகளின் புவியியல் அம்சங்களைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை நன்கு வலியுறுத்துகிறது.
இந்தத் தினமானது, நீர்நிலையியல் குறித்த உலகளாவியப் பெரும் விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக 2005 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் ஒரு அதிகாரப் பூர்வமாக நிறுவப்பட்டது.
இத்தினமானது சர்வதேச நீர் நிலையிவியல் அமைப்பு (IHO) நிறுவப்பட்டதன் ஆண்டு நிறைவை நினைவு கூர்கிறது.
பாதுகாப்பான வழிசெலுத்தல் மற்றும் பெருங்கடல் வளங்காப்பினை ஆதரிப்பதற்காக IHO ஆனது முதலில் 1921 ஆம் ஆண்டில் சர்வதேச நீர் நிலையியல் வாரியமாக நிறுவப் பட்டது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Seabed Mapping: Enabling Ocean Action" என்பதாகும்.