வர்த்தகம், வேலைவாய்ப்பு, வறுமைக் குறைப்பு மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியில் பருத்தியின் பங்கு குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
இது முதன்முதலில் 2019 ஆம் ஆண்டில் பெனின், புர்கினா பாசோ, சாட் மற்றும் மாலி ஆகிய "நான்கு முக்கியப் பருத்தி உற்பத்தி" நாடுகளால் உலக வர்த்தக அமைப்பிடம் முன்மொழியப்பட்டது.
பருத்தியானது 24 மில்லியன் விவசாயிகளை ஆதரிக்கிறது என்பதோடு அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் பெண்கள் ஆவர் என்பதோடு மேலும் ஐந்து கண்டங்களில் உள்ள 80 நாடுகளில் 100 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களையும் இது ஆதரிக்கிறது.
இந்திய நாடானது இந்த நாளினை "Cotton 2040: Technology, Climate & Competitiveness" என்ற கருத்துருவுடன் இத்தினத்தினை அனுசரித்தது.