உலக பார்வையற்றோர் எழுத்து முறை (பிரெய்லி) தினம் – ஜனவரி 04
January 6 , 2021 1683 days 781 0
பார்வையற்றோர் எழுத்து முறையைக் கண்டுபிடித்தவரான லூயிஸ் பிரெய்லி அவர்கள் பிரான்ஸில் 1809 ஆம் ஆண்டு ஜனவரி 04 அன்று பிறந்தார்.
இந்தக் கண்டுபிடிப்பிற்கு இவருடையப் பங்களிப்பை அனுசரிக்கும் விதமாகவும் இவரை நினைவு கூறும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் இவருடைய பிறந்த தினமான ஜனவரி 04 ஆனது உலக பிரெய்லி தினமாக அனுசரிக்கப் படுகின்றது.
இது பார்வையற்றோர் மற்றும் பகுதியளவு பார்வையுடைய நபர்களுக்கான மனித உரிமைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வதற்கான ஒரு தகவல் தொடர்பு முறையாக பிரெய்லியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
இது 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் அதிகாரப் பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப் பட்டு வருகின்றது.