உலக பாலைவனமாக்குதல் மற்றும் வறட்சியை எதிர்கொள்ளும் தினம் - ஜூன் 17
June 22 , 2018 2510 days 671 0
ஜூன் 17 அன்று ஒவ்வோர் ஆண்டும், உலக அளவில் பாலைவனமாக்குதலை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக பாலைவனமாக்குதல் மற்றும் வறட்சியை எதிர்கொள்ளும் தினம் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த தினத்தின் முக்கிய நோக்கமானது நிலச் சீரழிவு நடுநிலைமையினை, சிக்கல்களைத் தீர்த்தல், வலிமையான சமுதாய ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்பின் மூலமே அடைய முடியும் என்பதை நினைவு கூறவே ஆகும்.
WDCDD-2018-ன் கருத்துரு “நிலம் உண்மையான மதிப்புள்ளது - அதில் முதலீடு செய்யுங்கள்”.
WDCDD - World Day to Combat Desertification and Drought
ஈக்வேடார் அரசாங்கம் இதனை உலக அளவில் தொகுத்து வழங்குகிறது.
ஐக்கிய நாடுகளின் பொதுக்குழு ஜூன்-17-ஐ WDCDD-ஆக 1994ல் தீர்மானத்தின் மூலம் ஏற்றுக்கொண்டது.
WDCDD முதன்முதலில் 1995-ல் பின்பற்றத் துவங்கப்பட்டது. இந்த தினமானது 1994-ல் ஐக்கிய நாடுகளின் பொதுக்குழுவால் பாலைவனமாக்குதலை எதிர்கொள்வதற்கான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்ட தினத்தைக் குறிக்கிறது.