உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் தினம் 2026 – ஜனவரி 30
February 3 , 2026 3 hrs 0 min 58 0
புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களைக் கட்டுப்படுத்துதல், ஒழித்தல் மற்றும் முற்றிலுமாக நீக்குவதற்கான முயற்சிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், அவற்றை விரைவுபடுத்துவதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாள் முதன்முதலில் 2020 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பால் அனுசரிக்கப் பட்டது.
புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் என்பவை, ஏழை மற்றும் பாதிக்கப்படக் கூடிய மக்களைப் பாதிக்கும், தடுக்கக்கூடிய மற்றும் சிகிச்சையளிக்கக்கூடிய தொற்று நோய்களாகும்.
2024 ஆம் ஆண்டில் சுமார் 1.4 பில்லியன் மக்களுக்குப் புறக்கணிக்கப்பட்ட வெப்ப மண்டல நோய்களுக்கான சிகிச்சைகள் தேவைப்பட்டன என்பதோடுஇது 2010 ஆம் ஆண்டிலிருந்து 36% குறைந்துள்ளது.
58 நாடுகள் குறைந்தபட்சம் ஒரு புறக்கணிக்கப்பட்ட வெப்ப மண்டல நோயை ஒழித்து உள்ளன, மேலும் உலக சுகாதார நிறுவனம் 2030-ஆம் ஆண்டிற்குள் 100 நாடுகளை இலக்காகக் கொண்டுள்ளது.
2026-ஆம் ஆண்டின் கருப்பொருள் “ஒன்றிணைவோம். செயல்படுவோம். ஒழிப்போம்” என்பதாகும்.