உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் தினம் – ஜனவரி 30
June 3 , 2021 1523 days 598 0
நடப்பிலிருக்கும் 74வது உலக சுகாதார மன்றமானது ஜனவரி 30 ஆம் தேதியினை உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் தினமாக அறிவித்துள்ளது.
இதற்கான முன்மொழிதலை ஐக்கிய அரபு அமீரகமானது முன்வைத்தது.
இந்த நோய்களால் நிலவும் உலகளாவிய சுமையை அங்கீகரிக்கும் இயக்கத்தில் ‘புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் மீதான லண்டன் பிரகடனம்’ ஆனது ஒரு முக்கிய மைல்கல்லாக இருந்தது.
இந்தப் பிரகடனமானது 2012 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதியன்று ஏற்றுக் கொள்ளப் பட்டது.