TNPSC Thervupettagam

உலக புலனாகாச் சொத்து முதலீட்டு அறிக்கை 2026

July 16 , 2026 11 days 73 0
  • உலக அறிவுசார் சொத்துரிமை நிறுவனம் (WIPO) மற்றும் லூயிஸ் வணிகப் பள்ளி ஆகியவை இணைந்து வெளியிட்ட உலக புலனாகாச் சொத்து முதலீட்டு அறிக்கை 2026-ஆனது, உலகளாவியக் கண்டுபிடிப்பு மையமாக இந்தியாவின் வளர்ச்சியை எடுத்துரைத்து உள்ளது.
  • உலகின் 15 பெரிய பொருளாதாரங்களில் மகத்தான முதலீட்டில் இந்தியா அதிவேக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • மென்பொருள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), அறிவுசார் சொத்துரிமை (IP), கண்டுபிடிப்பு மற்றும் நிறுவனத் திறன்கள் ஆகியவற்றின் உந்துதலால், 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் மகத்தான முதலீடு 7.9% வளர்ச்சியடைந்து $78.2 பில்லியனை எட்டியுள்ளது.
  • டிஜிட்டல் மாற்றம், புத்தொழில்கள் மற்றும் கண்டுபிடிப்புகளின் ஆதரவுடன் அறிவு சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி இந்தியா மாறுவதை இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.
  • இது சீர்திருத்தங்கள், தொழில்நுட்பத் தத்தெடுப்பு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் வலுவடைந்து வரும் கண்டுபிடிப்புச் சூழலமைப்பைப் பிரதிபலிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்