பெருமூளை வாதம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் சம உரிமைகள், அணுகல் மற்றும் உள்ளடக்கத்திற்காக வாதிடுவதையும் இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
உலகளவில் பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்ட 17 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை முன்னிலைப்படுத்த இத்தினம் நினைவு கூரப் படுகிறது.
உலகளாவிய நடவடிக்கைகளுக்கான குரல்களை ஒன்றிணைத்து நெருக்கடி கொடுப்பதற்காக, பெருமூளை வாதக் கூட்டணியால் இந்த நாள் முதன்முதலில் 2012 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Unique and United" என்பதாகும்.