இந்த நாளானது (மே 05), போர்ச்சுக்கீசிய மொழி பேசும் நாடுகளின் சமுதாய அமைப்பினால் (Community of Portuguese – Speaking Countries) 2009 ஆம் ஆண்டில் உலக போர்ச்சுக்கீசிய மொழி தினமாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
போர்ச்சுக்கீசிய மொழி பேசும் நாடுகளின் சமுதாய அமைப்பானது 2000 ஆம் ஆண்டிலிருந்து யுனெஸ்கோவுடன் அதிகாரப் பூர்வமாகக் கூட்டாண்மையிலிருக்கும் அரசுகளுக்கிடையேயான ஒரு அமைப்பாகும்.
2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற யுனெஸ்கோவின் 40வது பொது மாநாட்டுக் கூட்டத்தில் ஒவ்வொரு வருடமும் மே 05 ஆம் நாளினை உலக போர்ச்சுக்கீசிய மொழி தினமாக கடைபிடிப்பதற்கான முடிவானது மேற்கொள்ளப்பட்டது.