TNPSC Thervupettagam

உலக போலியோ தினம் 2026 - அக்டோபர் 24

October 26 , 2026 14 hrs 0 min 39 0
  • இந்த நாள் போலியோ தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தடுப்பூசியை ஊக்குவித்தல் மற்றும் போலியோவை ஒழிப்பதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான கருப்பொருள் "ஒன்றாக, நாம் போலியோவை முடிவுக்குக் கொண்டு வருவோம்" (Together, We End Polio) என்பதாகும்.
  • போலியோ என்பது போலியோ வைரஸால் ஏற்படும் அதிக தொற்று நோயாகும், இது முக்கியமாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பாதிக்கிறது மற்றும் நிரந்தர முடக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.
  • 2014 ஆம் ஆண்டு மார்ச் 27 அன்று உலக சுகாதார அமைப்பின் (WHO) தென்கிழக்கு ஆசியப் பிராந்தியச் சான்றிதழ் ஆணையத்தால் இந்தியா போலியோ இல்லாத நாடு என்று சான்றளிக்கப்பட்டது.
  • போலியோ வைரஸ் (wild poliovirus) பரவலாகக் காணப்படும் இரண்டு நாடுகளாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் மட்டுமே உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்