உலக ப்ரீ-டயாபட்டீஸ் (நீரிழிவுக்கு முந்தைய நிலை) தினம் – ஆகஸ்ட் 14
August 18 , 2021 1462 days 477 0
2021 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதியானது உலகம் முழுவதும் உலக ப்ரீ-டயாபட்டீஸ் (Prediabetes) தினமாக அனுசரிக்கப்படும்.
இத்தினமானது ப்ரீ-டயாபட்டீஸ் குறித்த ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதையும் நீரிழிவு நோயின் அதிகரிப்பு வீதத்தினைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதியானது முதலாவது உலக ப்ரீ-டயாபட்டீஸ் தினமாகும்.
உலக நீரிழிவு நோய் தினத்திற்கு (நவம்பர் 14) 90 நாட்கள் முன்பாக இத்தினமானது தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையை மாற்றுவதற்கும் அது மேன்மேலும் முன்னேறி முழுமையான நீரிழிவு நிலையை அடைவதைத் தடுப்பதற்கும் ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுவதற்கு அறிவியல் ரீதியாக 90 நாட்கள் தேவைப்படும் என்பதே இதற்கான ஒரு காரணமாகும்.
ப்ரீ-டயாபட்டீஸ் என்பது இரத்தத்தின் சர்க்கரை அளவு அதன் இயல்பான அளவை விட சற்று அதிகமாக இருப்பதும், ஆனால் 2 ஆம் வகை நீரிழிவு நோயாக (மோசமான வாழ்க்கை முறையில் உருவான) வகைப்படுத்தப்படும் அளவிற்கு இல்லாத வகையிலும் உள்ள ஒரு உடல்நிலை ஆகும்.