TNPSC Thervupettagam

உலக மக்கள் தொகை குறித்த நிலை - 2024

April 23 , 2024 11 days 143 0
  • ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) ஆனது 2024 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை குறித்த நிலை என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கைக்கு "ஒன்றிணைந்த வாழ்க்கை முறைகள், நம்பிக்கையின் இழைகள்: பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகளில் உள்ள பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்குக் கொண்டு வருதல்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
  • 144.17 கோடி மக்கள்தொகையுடன் உலகளவில் இந்தியா முன்னணியில் உள்ளது என்ற நிலையில் அதனைத் தொடர்ந்து 142.5 கோடி மக்கள் தொகையுடன் சீனா இடம் பெற்று உள்ளது.
  • இந்திய மக்கள் தொகையில் 24 சதவீதம் பேர் 0 முதல் 14 வயதிற்குட்பட்டவர்கள், 17 சதவீதம் பேர் 10 முதல் 19 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர்.
  • இந்தியாவின் மக்கள் தொகையானது 77 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • 10 முதல் 24 வயதிற்குட்பட்டப் பிரிவினர் 26 சதவிகிதமும், 15 முதல் 64 வயதிற்குட்பட்டப் பிரிவினர் 68 சதவிகிதமும் உள்ளனர்.
  • கூடுதலாக, இந்தியாவின் மக்கள்தொகையில் 7 சதவீதம் பேர் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் ஆவர் என்ற நிலையில் ஆண்களின் ஆயுட்காலம் 71 ஆண்டுகள் மற்றும் பெண்களின் ஆயுட்காலம் 74 ஆண்டுகள் ஆகும்.
  • 2006-2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவில் குழந்தைத் திருமண சதவீதம் 23 ஆக இருந்தது.
  • இந்தியாவில் பேறுகாலத் தாய்மார் இறப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளன என்ற வகையில் இது உலகளாவிய அனைத்து உயிரிழப்புகளில் 8 சதவிகிதம் ஆகும்.
  • 100,000 பிறப்புகளுக்கு சுமார் 1,671 என்ற அதிகபட்ச அளவிலான உயிரிழப்புகளானது அருணாச்சலப் பிரதேசத்தின் திராப் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்