மக்கள்தொகை உயர்வு நிலையான ஒரு வளர்ச்சியைப் பாதிக்கிறது என்ற நிலையில் குடும்பக் கட்டுப்பாடு, பாலினச் சமத்துவம், மகப்பேறு சுகாதாரம், வறுமை மற்றும் மனித உரிமைகள் போன்ற சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
இது 1989 இல் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தால் (UNDP) நிறுவப்பட்டது.
உலக மக்கள்தொகையானது ஐந்து பில்லியனை எட்டிய ஜூலை 11, 1987 அன்று "ஐந்து பில்லியன் தினம்" அனுசரிக்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Empowering young people to create the families they want in a fair and hopeful world" என்பதாகும்.