ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியம் என்ற அமைப்பானது, ஆண்டுதோறும் உலக மக்கள்தொகை நிலை அறிக்கையினை வெளியிடுகிறது.
இந்த அறிக்கையானது “Seeing the Unseen: The case for action in the neglected crisis of unintended pregnancy “என்று தலைப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையில், உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 121 மில்லியன் என்ற அளவில் தேவையற்ற கருத்தரிப்புகள் அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
உலகம் முழுவதும் நவீன மற்றும் பாதுகாப்பான கருத்தடை முறைகள் இல்லாததால், சுமார் 257 மில்லியன் பெண்கள் கருத்தரிப்பினைத் தவிர்ப்பதற்கான கருத்தடை முறைகளை உபயோகிக்காமல் உள்ளனர்.