FAO (உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு) அமைப்பின் 2026 ஆம் ஆண்டிற்கான உலகின் மண் வளங்களின் நிலை குறித்த அறிக்கை, உலகளவில் மண் சீரழிவு மோசமாகி வருவதாகவும், தெற்காசியா, குறிப்பாக இந்தியா, கடுமையான சீரழிவை எதிர்கொண்டுள்ளதாகவும் காட்டுகிறது.
பிராந்திய மதிப்பீடுகளில் பாதிக்கும் மேற்பட்டவை நிலையான மண் நடைமுறைகளை குறைவாகவோ அல்லது மிகக் குறைவாகவோ பின்பற்றுவதைப் பதிவு செய்துள்ளன; 58 சதவீதம் 2015 ஆம் ஆண்டு முதல் மோசமான நிலையைக் காட்டியுள்ளன, அதே சமயம் 10 சதவீதம் மட்டுமே முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன.
மண்ணரிப்பு மிகப்பெரிய பிரச்சனையாக அடையாளம் காணப்பட்டுள்ளது, 81 சதவீத மதிப்பீடுகள் அரிப்பு மேலாண்மையை மோசம் அல்லது மிகவும் மோசம் என மதிப்பிட்டுள்ளன மற்றும் 65 சதவீதம் சீரழிவைப் பதிவு செய்துள்ளன.
இந்தியாவில், சுமார் 30-37 சதவீத நிலங்கள் சீரழிந்துள்ளதாகவும், சுமார் 83 மில்லியன் ஹெக்டேர் நிலம் நீரரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது; இந்தியா ஆண்டுதோறும் சுமார் 4.8-5.3 பில்லியன் டன் மண்ணை இழக்கிறது.
இந்தியா, வங்காள தேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நிலைத்தன்மையற்ற அதிகப்படியான நைட்ரஜன் உபரியைக் கொண்டுள்ளன, மேலும் உலகளாவிய சராசரியான 59 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், இந்தியப் பயிர்களுக்குப் பயன்படுத்தப் படும் நைட்ரஜனில் 30-45 சதவீதத்தை மட்டுமே உறிஞ்சுகின்றன.
இந்த அறிக்கை தவறாக வழிநடத்தப்படும் விவசாய மானியங்களை, குறிப்பாக நைட்ரஜன் யூரியாவிற்கு சாதகமாக உள்ளவற்றை எடுத்துக் காட்டுகிறது, மேலும் விவசாயம், நிலம், பருவநிலை மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம் குறித்த கொள்கைகளின் சிறந்த ஒருங்கிணைப்புக்கு அழைப்பு விடுக்கிறது.