உலக மதி இறுக்கத்திற்கான விழிப்புணர்வு தினம் – ஏப்ரல் 02
April 5 , 2021 1717 days 702 0
இத்தினம், மதி இறுக்கத்துடன் உள்ளவர்களை மக்கள் புரிந்து கொள்ளச் செய்யவும் அவர்களை ஏற்றுக் கொள்ளச் செய்யவும் அவர்களுக்கு உலகளாவிய ஆதரவினை அதிகரிக்கச் செய்யவும் வேண்டி மக்களை ஊக்குவிப்பதற்கு என்று கடைபிடிக்கப் படுகிறது.
மதி இறுக்கம் என்பது சமூகம் மற்றும் மொழித் தொடர்புகளில் குறைபாடு, செய்ததையேத் திரும்பத் திரும்பச் செய்தல் மற்றும் குறைவான ஆர்வம் என்ற குறைபாடுகள் கொண்ட ஒரு நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு நோயாகும்.
இந்த ஆண்டிற்கான கருத்துரு, “பணியிடங்களில் சேர்த்துக் கொள்ளுதல் : பெருந்தொற்றுக்குப் பிந்தைய உலகில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள்” ('Inclusion in the Workplace: Challenges and Opportunities in a Post-Pandemic World')என்பதாகும்.