TNPSC Thervupettagam

உலக மனித உருவ எந்திரங்களுக்கான விளையாட்டுகள்

August 25 , 2025 15 hrs 0 min 43 0
  • சீன நாடானது, செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் ஆகியவற்றை முன்னிலைப்படுத்துவதற்காக பெய்ஜிங்கில் முதல் உலக மனித உருவ எந்திரம் / ரோபோ விளையாட்டுப் போட்டிகளை நடத்துகிறது.
  • 16 நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு எந்திரங்கள் கால்பந்து, குத்துச்சண்டை மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற 26 பிரிவுகளில் போட்டியிட்டன.
  • ரோபோக்களின் விரைவான இயக்கம், தொலைநோக்கு மற்றும் தன்னியக்கம் ஆகியவற்றினை மேம்படுத்துவதற்கான நேரடிச் சோதனைக் களமாக இந்த நிகழ்வு செயல்பட்டது.
  • 2050 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய ரோபாட்டிக்ஸ் சந்தை 5 டிரில்லியன் டாலர்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதுடன், சீனா மனித உருவ ரோபாட்டிக்ஸ் துறையில் தலைமைத்துவத்தை எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது.
  • மோர்கன் ஸ்டான்லி நிறுவனமானது, நூற்றாண்டின் நடுப்பகுதியில் சீனா 300 மில்லியனுக்கும் அதிகமான மனித உருவ எந்திரங்களை இயக்கும் என்று மதிப்பிடுகிறது.
  • 1 டிரில்லியன் யுவான் மதிப்புள்ள அரசு நிதி சீனாவின் நீண்டகாலத் தொழில்நுட்பம் மற்றும் ரோபாட்டிக்ஸ் விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்