முதலாவது உலக மருந்துக் கொள்கைக் குறியீட்டில் இடம்பெற்ற 30 நாடுகளில் இந்தியா 18வது இடத்தில் உள்ளது.
இந்தக் குறியீடானது 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் தீங்கு குறைப்பிற்கான கூட்டமைப்பால் வெளியிடப்பட்டது.
நார்வே, நியூசிலாந்து, போர்ச்சுகல், ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மனிதாபிமானம் மற்றும் சுகாதாரம் சார்ந்த மருந்துக் கொள்கைகளில் முதல் 5 நாடுகளாக தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
பிரேசில், உகாண்டா, இந்தோனேசியா, கென்யா மற்றும் மெக்சிகோ ஆகியவை குறைவான தரங்களைப் பெற்ற ஐந்து நாடுகள் ஆகும்.