டாக்டர் A.P.J. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளையும், மாணாக்கர் அதிகாரமளித்தல் மற்றும் கல்விக்கான அவரது வாழ்நாள் அர்ப்பணிப்பையும் கௌரவிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இது "உலக மாணாக்கர் தினம்" என்று பெயரிடப்பட்டாலும், இந்த நாளுக்கு இந்தியாவிற்கு வெளியே வேறு நாடுகளில் எந்த அங்கீகாரமும் இல்லை.
2002 முதல் 2007 ஆம் ஆண்டு வரை, கலாம் அவர்கள் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார்.
தனது பதவிக் காலத்திற்கு பிறகு, 2015 ஆம் ஆண்டில் அவர் இறக்கும் வரை மாணாக்கர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தார்.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Empowering Students as Agents of Innovation and Change" என்பதாகும்.