உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் - ஜூன் 15
June 17 , 2023 779 days 421 0
முதியோர்களைப் பாதிக்கும் பண்பாட்டு, சமூக, பொருளாதார மற்றும் ஜனநாயக செயல்முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் முதியோர் எதிர் கொள்ளும் வன்கொடுமைகள் பற்றிய சரியான புரிதலை வழங்கச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த வருடாந்திர நிகழ்வானது, முதியோர் வன்கொடுமை தடுப்புக்கான சர்வதேச வலையமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றினால் 2006 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது .
2030 ஆம் ஆண்டிற்குள் உலகில் உள்ள முதியோரின் எண்ணிக்கை 1.4 பில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "சுழற்சி முறைப் பாதிப்பினைத் தடுத்தல்: முதியோர்களுக்கான கொள்கை, சட்டம் மற்றும் சான்றுகள் அடிப்படையில் அமைந்த நடவடிக்கைகள் ஆகியவற்றில் நிலவும் ஒரு பாலின அடிப்படையில் அமைந்த வன்முறையை நிவர்த்தி செய்தல்" என்பதாகும்.
சமீபத்தியத் தரவுகளின்படி, 28% அளவில் உடல்ரீதியான வன்முறையினாலும், அதைத் தொடர்ந்து அவமரியாதை (54%), வாய்மொழி வன்முறை (36%) மற்றும் புறக்கணிப்பு (29%) போன்றவற்றினாலும் பாதிக்கப் பட்டுள்ளனர்.